டி20 : முதல் மூன்று ஓவரை மெய்டன் செய்து தீப்தி சர்மா சாதனை..!

Default Image

தென்னாபிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய மகளிர் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் போட்டி நடைபெற்றது.

முதலில் இறங்கிய  இந்திய அணி  8 விக்கெட் இழந்து 130 ரன்கள் எடுத்தது .131ரன்கள் இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 19.5 ஓவரில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 4 ஓவரை வீசி  8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டை பறித்தார். மேலும் டி20 போட்டியில் மூன்று ஓவர் மெய்டன் செய்த இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார்.

தீப்தி சர்மா முதல் மூன்று ஓவரை மெய்டன் செய்து உள்ளார். கடைசி ஓவரில் தான் 8 ரன்கள் கொடுத்தார். ஆண்கள் அணியில் கூட இதுவரை யாரும் முதல் மூன்று ஓவரை மெய்டன் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi