இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இந்த டி20 தொடரில் இந்திய அணி சூரியகுமார் தலைமையிலும், அதேபோல ஆஸ்திரேலியா அணி மேத்யூ வெயிட் தலைமையில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த நிலையில் அதிரடியாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஜோஷ் இங்கிலீஸ் 50 பந்துகளில் 110 ரன்களை குவித்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டீவன் ஸ்மித் 52 ரன்கள் எடுத்தார்.
#INDvAUS : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி..!
இந்த நிலையில், இந்திய அணிக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…