SwissOpen2022:சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து – வாழ்த்திய பிரதமர் மோடி!

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் பிவி சிந்து வென்றார்.
ஸ்விட்சர்லாந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் பிரிவு ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து,தாய்லாந்தின் புசானன் ஒங்பாம்ருங்பானை எதிர்கொண்டார். ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற சிந்து 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட் கணக்கில் புசானனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
தாய்லாந்து வீராங்கனை பூசானனுடன் 17 முறை மோதியுள்ள சிந்து அதில் 16 முறை வெற்றியை மட்டுமே பெற்றுள்ளார்.எனினும்,2019 ஆம் ஆண்டு ஹாங்காங் ஓபனில் மட்டும் சிந்து தோல்வி அடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,2022 ஆம் ஆண்டு சுவிஸ் ஓபன் பட்டத்தை வென்ற பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் என்றும்,அவரது சாதனைகள் இந்திய இளைஞர்களை ஊக்கப்படுத்துகின்றன.அவருடைய எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
Congratulations to @Pvsindhu1 on winning the Swiss Open 2022. Her accomplishments inspire the youth of India. Best wishes to her for her future endeavours.
— Narendra Modi (@narendramodi) March 27, 2022
மேலும்,பலரும் பிவி சிந்துவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையத் மோடி இன்டர்நேஷனல் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025