சூர்யகுமார் யாதவுக்கு காயம்… கேப்டனாக ஜடேஜா.. நடந்தது என்ன?

suryakumar yadav

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்திய அணி பேட்டிங்கில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தென்னாபிரிக்கா பந்துவீச்சை சிதறவிட்டார்.

அதன்படி, அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்ஸ் உள்பட 100 ரன்களில் ஆட்டமிழந்தார். இது அவரது 4வது டி20 போட்டி சதமாகும். இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக (4 சதங்கள்) சதங்கள் அடித்த ரோகித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் சாதனையை சமன் செய்தார்.

பிறந்தநான்று வரலாறு படைத்த குல்தீப் யாதவ்…இவர்தான் முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்…

இதையடுத்து, களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 95 ரங்களில் சுருண்டது. இதனால், 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது இந்தியா. இதனிடையே, தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்யும்போது, போட்டியின் 3வது ஓவரின் போது பீல்டிங்கில் இருந்த சூர்யகுமார் யாதவ்விற்கு கணுக்கால் பகுதியில் காயம் (கால் மடங்கியதால்) ஏற்பட்டது.  வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய மூன்றாவது ஓவரின் போது ரீசா ஹென்ட்ரிக்ஸ் அடித்த ஷாட்டை நிறுத்தி பந்தை திரும்ப வீசும்போது சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நடக்க முடியாத நிலையில் இருந்த சூர்யகுமார் யாதவை உடனடியாக மைதானத்தை விட்டு வெளியே அழைத்து சென்றனர். இதனால், சூர்யா இல்லாத நிலையில், அப்போட்டியில் துணை கேப்டனான ரவீந்திர ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றார். மேலும், சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக ரவி பிஷ்னோய் மாற்று வீரராக பீல்டிங் செய்தார். இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Indonesia Landslide
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS