‘தற்போதைய சூழலில் உயிர் வாழ்வதே மிகவும் முக்கியமானது’ – இந்திய அணியில் சுஷில்குமாருக்கு இடம் மறுப்பு…!

Default Image

தற்போதைய சூழலில் உயிர் வாழ்வதே மிகவும் முக்கியமானது. இந்திய மல்யுத்த சங்கத்திடம் நான் இன்னும் பேசவில்லை. விரைவில் பேசுவேன்.

அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெறுகிறது. இது ஒலிம்பிக்குக்கு தகுதி பெற மல்யுத்தத்தில் நடத்தப்படும் கடைசி போட்டி தான் இது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ஆண்களுக்கான 74 கிலோ உடல் எடைப்பிரிவில் முன்னாள் ஆசிய சம்பியனான அமித் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக இந்திய அணியில், மூத்த வீரர் சுஷில்குமாருக்கு வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது. சுஷில்குமார் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2008ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியவர்.

இந்திய அணி தேர்வில் அவரது பெயர் இடம் பெறாதது குறித்து சுஷில்குமாரிடம் கேட்டபோது,  ‘தற்போதைய சூழலில் உயிர் வாழ்வதே மிகவும் முக்கியமானது. இந்திய மல்யுத்த சங்கத்திடம் நான் இன்னும் பேசவில்லை. விரைவில் பேசுவேன்.’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  மல்யுத்த சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரீ ஸ்டைல் 74 கிலோ உடல் எடைப்பிரிவில் ஆசிய தகுதி சுற்று மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் சந்தீப் மானின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. அதனால் அடுத்த நிலையில் உள்ள அமித் தன்கருக்கு வாய்ப்பு வழங்குவது என்று தேர்வு கமிட்டி முடிவு செய்திருக்கிறது.

மேலும், 97 கிலோ பிரிவில் சத்யவார்ட் காடியன், 125 கிலோ பிரிவில் சுமித், கிரேக்கோ ரோமன் பிரிவில் சச்சின் ராணா (60 கிலோ), ஆஷூ (67 கிலோ), குர்பிரீத் சிங் (77 கிலோ), சுனில் (87 கிலோ), தீபன்ஷூ (97 கிலோ), நவீன் குமார் (130 கிலோ), பெண்கள் பிரிவில் சீமா (50 கிலோ), நிஷா (68 கிலோ), பூஜா (76 கிலோ) ஆகியோர் பங்கேற்பார்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்