மும்பையில் சின்ன தல சுரேஷ் ரெய்னா கைது..!

கொரோனா வைரஸ் காரணமாக ஹோட்டல் தொடங்க மாநில அரசுகள் நிபந்தனையுடன் அனுமதி அளித்து வருகிறது. இருப்பினும், விதிகளை மீறி சில இடங்களில் இரவு வரை ஹோட்டல்கள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டிராகன் ஃப்ளை கிளப்பில் அதிகாலை 3 மணியளவில் மும்பை காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, மும்பை காவல்துறை நடத்திய சோதனையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தாவா ஆகியோர் அந்த கிளப்பில் நடந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு இருந்தனர். இந்நிலையில், கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாகவும், கூட்டமாக கூடியதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாக கூறி சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டார்.
பின்னர், கைது செய்யப்பட்ட ரெய்னா பெயிலில் விடுவிக்கப்பட்டார். இதில் 27 ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025