உலக பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்ற சூரத் இளம்பெண்.!
- குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா இளம்பெண் மாஸ்கோவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
- கடந்த ஆண்டு அவர் வென்ற பதக்கங்களை சேர்த்தால், இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் குவித்திருக்கிறார்.
குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா கணினி பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இவர் பளு தூக்குவது ஆண்களுக்கு மட்டுமானது அல்ல, பெண்களும் பளு தூக்கலாம் என நிரூபித்த பெண். ரோமா ஷா அண்மையில் மாஸ்கோவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான உலக மூல பவர் லிஃப்டிங் கூட்டமைப்பு( World Raw Power lifting Federation ) போட்டியில் பங்கேற்றார்.
இந்நிலையில், ரோமா ஷா மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் உள்பட சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். பின்னர் கடந்த ஆண்டும் அவர் வென்ற பதக்கங்களை சேர்த்தால், இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் அந்த இளம்பெண் குவித்திருக்கிறார்.
இதனிடையே போட்டி முடிவில் ரோமா ஷா கூறுகையில், நான் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறேன். மற்றும் இந்தியாவில் இருந்து நான் மட்டுமே பெண் போட்டியாளராக பங்கேற்கிறேன், மேலும் 22-க்கும் மேற்பட்ட நாடுககளில் நடத்தும் சாம்பியன்ஷிப்பு போட்டியில் பங்கேற்றுள்ளன எனவும், எனக்கு பயிற்சியளித்த பயிற்சியாளரின் வழிகாட்டல் மூலம் இந்த சாதனையை எட்டியதாகவும், ரோமா தொடர்ந்து தனது பயிற்சிகளை மேற்கொண்டு தொடருவேன் என தெரிவித்தார்.