தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி! இந்திய வீரர்களை குறித்த சுனில் கவாஸ்கர்!
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டி விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் வீரர்கள் அனைவரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் சிறந்த லெவன் அணியை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” செஞ்சூரியனில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இது தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லா? காசி விஸ்வநாதன் பதில்!
எனவே இரண்டு அணிகளிலும் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகமாக விக்கெட் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்திய அணியில் நான் தேர்வு செய்து வைத்து இருக்கும் பிளேயிங் லெவன் மிகவும் எளிமையாக இருக்கும். அவர்கள் யார் யார் எல்லாம் என்று நான் சொல்கிறேன் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்குவார்கள்.
சுப்மான் கில் மூன்றாவது, நம்பர் 4-லில் விராட் கோலி நம்பர் 5-ல் கேஎல் ராகுல், நம்பர் 6 ஷ்ரேயாஸ் ஐயர் இவர்கள் இருவரில் யாராவது மாற்றி மாற்றி களமிறங்கலாம். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின். பின்னர் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் களமிறங்கலாம். நான் சொன்ன வரிசை படி வீரர்களை தேர்வு செய்து விளையாடினாள் நன்றாக இருக்கும். ” எனவும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.