பயிற்சி முக்கியம்! இந்தியா தோல்வி குறித்து விமர்சித்து பேசிய சுனில் கவாஸ்கர்!

Published by
பால முருகன்

இந்தியா – தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் இந்தியா அணி  245 மற்றும் 131 ரன்களை எடுத்தது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா தனது ஒரே இன்னிங்ஸில் 408 ரன்களை குவித்தது.இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் தோல்வியை பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசியுள்ளர். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ” இந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய சில வீரர்கள் இதற்கு முன்பு பயிற்சி போட்டியில் குழுவாகப் பிரிந்து இன்ட்ரா ஸஃகுவாட் பயிற்சிகளை மட்டுமே செய்தனர்.

இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டி என்பது மிகவும் நகைச்சுவை கொண்ட ஒன்றாகும். ஏனென்றால் அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு மிக வேகமாக பந்துவீசுவார்கள், ஆனால் பவுன்சர்களை வீசுவார்களா? அப்படி வீசினால் அவர்கள் காயமடைந்து விடுவார்கள் என்பதால் வீசமாட்டார்கள். இப்படி இருந்தால் சரியாக இருக்காது.

தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

எனவே, என்னை பொறுத்தவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை அடைந்ததற்கு முக்கிய காரணமே முன்கூட்டியே சென்று இந்திய அணியினர் ஒரு பயிற்சி போட்டியில் கூட விளையாடாதது தான். டெஸ்ட் போட்டிகளில் விளையாடவேண்டும் என்றால் நன்றாக பயிற்சி எடுக்கவேண்டும். ஆனால், அதனை இந்திய அணி செய்யவில்லை. போட்டியில் விளையாடுவதற்கு முன்பு சரியாக பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அப்படி செய்து விளையாடினாள் மட்டுமே வெற்றிபெற முடியும்” எனவும் சுன்னி கவாஸ்கர் கூறியுள்ளார்.

Recent Posts

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

38 minutes ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

59 minutes ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

2 hours ago

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு! நீதிமன்றம் அறிவிப்பு!

கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

2 hours ago

குடும்பத்திற்காகக் கூட்டணி வைத்த இபிஎஸ் வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது! – ஆர்.எஸ்.பாரதி

சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…

2 hours ago

செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…

2 hours ago