பயிற்சி முக்கியம்! இந்தியா தோல்வி குறித்து விமர்சித்து பேசிய சுனில் கவாஸ்கர்!
இந்தியா – தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் இந்தியா அணி 245 மற்றும் 131 ரன்களை எடுத்தது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா தனது ஒரே இன்னிங்ஸில் 408 ரன்களை குவித்தது.இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் தோல்வியை பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசியுள்ளர். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ” இந்த டெஸ்ட் தொடரில் விளையாடிய சில வீரர்கள் இதற்கு முன்பு பயிற்சி போட்டியில் குழுவாகப் பிரிந்து இன்ட்ரா ஸஃகுவாட் பயிற்சிகளை மட்டுமே செய்தனர்.
இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி போட்டி என்பது மிகவும் நகைச்சுவை கொண்ட ஒன்றாகும். ஏனென்றால் அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு மிக வேகமாக பந்துவீசுவார்கள், ஆனால் பவுன்சர்களை வீசுவார்களா? அப்படி வீசினால் அவர்கள் காயமடைந்து விடுவார்கள் என்பதால் வீசமாட்டார்கள். இப்படி இருந்தால் சரியாக இருக்காது.
தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!
எனவே, என்னை பொறுத்தவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை அடைந்ததற்கு முக்கிய காரணமே முன்கூட்டியே சென்று இந்திய அணியினர் ஒரு பயிற்சி போட்டியில் கூட விளையாடாதது தான். டெஸ்ட் போட்டிகளில் விளையாடவேண்டும் என்றால் நன்றாக பயிற்சி எடுக்கவேண்டும். ஆனால், அதனை இந்திய அணி செய்யவில்லை. போட்டியில் விளையாடுவதற்கு முன்பு சரியாக பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அப்படி செய்து விளையாடினாள் மட்டுமே வெற்றிபெற முடியும்” எனவும் சுன்னி கவாஸ்கர் கூறியுள்ளார்.