இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் டெஸ்ட் போட்டியின் பார்ம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 2 ரன், அடுத்த இன்னிங்ஸில் 26 ரன்கள் என குறைவான ரன்களை எடுத்தார்.
ஆனால், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 128 ரன்கள் எடுத்தார். அந்த போட்டிக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் பேட்டிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சுப்மன் கில் ஆக்ரோஷமான பாணியில் விளையாடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றில் விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் ” டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் சற்று ஆக்ரோஷமாக விளையாடுகிறார் என்று நான் நினைக்கிறேன்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டேவிட் வார்னர்..!
நீங்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்போது இவை அனைத்திற்கும் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக அந்த வித்தியாசம் பந்தில் உள்ளது. ஏனென்றால், டெஸ்ட் போட்டியில் இருக்கும் சிவப்பு பந்து டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வெள்ளை பந்தை விட வேகமாக செல்லும். டெஸ்ட் போட்டியில் நாம் பேட்டை வைத்து மெதுவாக தட்டினால் கூட பந்துவேகமாக சென்றுவிடும் . அந்த நேரத்தில் நாம் இன்னும் வேகமாக அடிக்க சென்றால் அது சரியாக இருக்காது. நிதானமாக விளையாடவேண்டும்.
இந்த விஷயத்தை சுப்மன் கில் தெரிந்துகொள்ளவேண்டும். சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிகவும் சிறப்பாக தொடங்கினார், ஆரம்பத்தில் எல்லாம் அவருடைய பேட்டிங் என்னை மட்டுமின்றி பலரையும் கவர்ந்தது. நான் உட்பட பலரும் அவரது ஷாட்களைப் பாராட்டினோம். அவர் மீண்டும் தனது ஃபார்மிற்கு வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்” எனவும் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3-ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…