கண்ணீருடன் ஓய்வு பெற்றார் சுனில் சேத்ரி ..கவலையில் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ ..!!
சுனில் சேத்ரி: இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி, தான் சமீபத்தில் அறிவித்தது போல கால்பந்து உலகக்கோப்பை தகுதி சுற்றில் குவைத் அணியுடனான போட்டிக்கு பிறகு சர்வேதச கால்பந்து போட்டிகளிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தகுதி சுற்றில் இந்திய அணி, குவைத் அணியை எதிர்கொண்டு விளையாடியது. இந்த சார்வதேச போட்டியில் இறுதியாக சுனில் சேத்ரி களம் கண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் போட்டி 0-0 என சமனில் முடிவடைந்தது.
மேலும், போட்டி முடிவடைந்த பிறகு அவருடன் விளையாடும் சக இந்திய வீரர்கள் அனைவரும் அவருக்கு மரியாதையுடன் கை கொடுத்தும், கை தட்டியும், கட்டி அனைத்தும் மரியாதை செய்தனர். கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதை நினைத்த சுனில் சேத்ரியும் கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க விடைபெற்றார்.
இவரது, இந்த குவைத் உடனான கடைசி சர்வேதச போட்டியானது கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் திடலில் நடைபெற்றது. இந்த போட்டியை காண உலகெங்கிலும் உள்ள சுமார் 50,000க்கும் அதிகமான அவரது ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர் கண்ணீர் மல்க மைதானத்திலிருந்து வெளியேறும் வீடியோவை X தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.
மேலும், இந்திய கால்பந்து அணி நிர்வாகமும் அவரது புகைப்படத்தை அவர்களது X தளத்தில் பகிர்ந்து நன்றி கூறி உள்ளனர். பார்ப்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.
𝗧𝗵𝗲 𝘀𝘁𝗿𝗲𝗲𝘁𝘀 𝘄𝗶𝗹𝗹 𝗻𝗲𝘃𝗲𝗿 𝗳𝗼𝗿𝗴𝗲𝘁 𝘆𝗼𝘂𝗿 𝗻𝗮𝗺𝗲🐐#SunilChhetri || @chetrisunil11pic.twitter.com/jBFnmsJSD3
— Sir BoiesX (@BoiesX45) June 6, 2024
The word ‘Legend’ is not enough to describe you 🫡
Thank you for everything, #SunilChhetri! 🙌🇮🇳pic.twitter.com/9dcZoCniER
— KolkataKnightRiders (@KKRiders) June 6, 2024