இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழந்து 497 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோகித்சர்மா 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 162 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இதனால் இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதை தொடர்ந்துதென் ஆப்பிரிக்க அணிக்கு ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் தொடக்கத்திலிருந்து விக்கெட்டை இழந்தது .தென்ஆப்பிரிக்கா அணி 40 ரன்களுக்கு ஐந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து நேற்று விளையாடி வந்தது.
நேற்று ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்டும் ,உமேஷ் ,நதீம் தலா 2 விக்கெட்டை பறித்தனர். தென் ஆப்பிரிக்கா அணியுடன் இந்தியா விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…