பாரிஸில் புயல் எச்சரிக்கை ..! ஒலிம்பிக் போட்டியின் நிலை என்ன?

Storm Alert in Paris

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஒலிமிபிக் தொடர் கடந்த 2020 ஆண்டுக்கு பிறகு நடப்பாண்டான 2024-இல் தற்போது பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை-26ம் தேதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டியானது வரும் ஆகஸ்ட்-11ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தது. தற்போது வரை எந்த ஒரு தடங்கலும் ஏற்படாமல் பலத்த ஏற்பாடுகளுடன் ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் பாரிஸ் புயல் தாக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். புயல் எச்சரிக்கை தற்போது விடப்பட்டுள்ளதால் அங்கு நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

மேலும், மைதானத்திற்குள் நடைபெறும் சில உட்புற விளையாட்டுகள் தவிர ஒரு சில தடகள போட்டிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படலாம். இதன் காரணாமாக முன் எச்சரிக்கையாக எடுக்கும் வகையில் அடுத்த கட்டத்தை நோக்கி பாரிஸ் நகர்ந்துள்ளது என தகவல் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்