அனைவருக்காகவும் ஸ்டீவ் ஸ்மித் பழியை ஏற்றுக்கொண்டார். இதில் ஒட்டுமொத்தம் அணியும் ஈடுபட்டுள்ளது என இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ பிளிண்டாப் பரபரப்பு தகவல்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் கேப்டன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டையே உலுக்கி எடுத்து இன்னமும் கூட இதன் விளைவுகளிலிருந்து மீள முடியவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ பிளிண்டாப் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியுமே பந்தை சேதப்படுத்தியது என்றும் ஸ்டீவ் ஸ்மித் பழியை ஏற்றுக் கொண்டார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல சேனலுக்கு பேட்டியளித்த பிளிண்டாஃப், ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் இந்த பால் டெம்பரிங்கில் ஈடுபடவில்லை என்று கூறுவதற்கில்லை.
ஒரு பவுலராக ஒருவர் பந்தை என்னிடம் அளிக்கும்போதே எனக்கு தெரிந்து விடும், அந்த பந்து சேதம் செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்று. அனைவருக்காகவும் ஸ்டீவ் ஸ்மித் பழியை ஏற்றுக்கொண்டார். இதில் ஒட்டுமொத்தம் அணியும் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதுபோன்று பந்தை சேதம் செய்வது நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருக்கிறது. இப்போது தொழில்நுட்பம், கேமராக்கள் அதிகமாக வந்ததால் அது வெளியில் தெரிகிறது என்றும் பந்தின் மீது இனிப்புகளைத் தடவுவது, சன்ஸ்க்ரீன் லோஷன்களைத் தடவுவது, போன்ற எல்லாவற்றையும் முயற்சி செய்துள்ளனர் என கூறினார். ஆனால் உப்புக் காகிதம் பயன்படுத்தியது முட்டாள்தனமானது. இதில் ஒட்டுமொத்த அணியே ஈடுபடவில்லை என்பது நம்பக் கஷ்டமாக உள்ளது. ஒரு விதத்தில் அணியில் உள்ள அனைவருமே இதில் ஈடுபட்டிருப்பார்கள், இதனால் ஸ்மித் பழியை ஏற்றுக்கொண்டார் என கூறியுள்ளார்.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…