டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் பக்னர் சாதனை முறியடித்த நடுவர் அலீம் தார்.!

Default Image
  • ஸ்டீவ் பக்னர் 1989 முதல்  2009 வரை 128 டெஸ்ட் மற்றும் 181 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றினார்.
  • இவரின் சாதனையை தற்போது அலீம் தார் 129 டெஸ்ட் போட்டியில் அம்பயராக இருந்து முறியடித்து உள்ளார்.

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான  முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

இப்போட்டியின் அம்பயராக பாகிஸ்தானின் அலீம் தார் இருந்து வருகிறார். நேற்றைய போட்டியில்  அலீம் தார் அம்பயராக பணியாற்றியதன் மூலம் ஸ்டீவ் பக்னரின் சாதனையை முறியடித்தார்.

ஸ்டீவ் பக்னர் 1989 முதல்  2009 வரை 128 டெஸ்ட் மற்றும் 181 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றினார்.பாகிஸ்தான் அணியில் முதல் தர கிரிக்கெட் விளையாடிய அலீம் தார் 2001-ம் ஆண்டு முதல் அம்பயராக பணியாற்றி வருகிறார்.இதுவரை  அலீம் தார் 129 டெஸ்ட் போட்டியில் அம்பயராக இருந்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் , எனது சர்வதேச வாழ்க்கையில் இரண்டு அதிசயங்களை பார்த்து உள்ளேன் என கூறினார். அதில் ஒன்று பிரையன் லாராவின் டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள்.அடுத்த அதிசயம் தென்னாப்பிரிக்கா அணி ,ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2006-ம்  ஆண்டு  ஜோகன்னஸ்பர்க்கில் மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் 434 ரன்கள் எடுத்தது. போன்ற சில மறக்கமுடியாத போட்டிகளையும் , சாதனைகளையும் பார்க்கும் நல்ல அதிர்ஷ்டத்தை நான் பெற்றிருக்கிறேன் என கூறினார்.

மேலும் தென்னாப்பிரிக்காவின் ரூடி கோர்ட்சென் 209 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றி உள்ளார். அலீம் தார் 207 ஒருநாள் போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார். எனவே ரூடி கோர்ட்சென் சாதனையை முறியடிக்க  அலீம் தாருக்கு இரண்டு போட்டிகள்தான் உள்ளன.  அலீம் தார் 46 டி 20 சர்வதேச போட்டிகளிலும் அம்பயராக பணியாற்றியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்