உசேன் போல்டை விட அதிவேகமாக ஓடிய கர்நாடக இளைஞரின் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலான நிலையில், சர்வதேச போட்டிகளுக்கு தயார் படுத்த அவருக்கு பயிற்சி அளிக்கப்படும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துளளார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அய்கலாவில் சமீபத்தில் கம்பளா என்கிற போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் எருமை மாடுகளுடன் வீரர்கள் ஓடும் அந்த போட்டிக்காக சுமார் 142.5 மீட்டருக்கு தண்ணீர் அதனோடு சகதியோடு தடம் அமைக்கப்பட்ருக்கும்.
இப்போட்டியில் கலந்து கொண்ட சீனிவாச கவுடா என்கிற இளைஞர் நிர்ணயிக்கப்பட்ட பந்தய தூரத்தை வெறும் 13.62 நொடியில் கடந்தார்.அதாவது 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் அழ்த்தியுள்ளார். காரணம் உலகில் மிக வேகமாக ஓடும் மனிதராகக் கருதப்படும் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்ட போட்டியைக் 9.58 விநாடிகளில் கடந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தும் வரும் நிலையில் தற்போது அதனை முறியடிக்கும் விதமாக சீனிவாச கவுடாவின் அதிவேக மின்னல் ஓட்டம் அமைந்து இருந்தது.
சீனிவாச கவுடா (28) நிரம்பிய இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் தான் இவர் கலந்து கொண்ட இந்த போட்டியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. அவருடைய இந்த திறமையை கண்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த பதிவில் 100 மீட்டர் போட்டிகளில் பங்கேற்கும் விதமான சீனிவாச கவுடாவுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும் அல்லது கம்பாலா போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவிற்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தன் ட்விட்டர் பக்கத்தில் சீனிவாசா குறித்து பதிவிட்டுள்ளார்.அதில் சிறந்த வீரரான சீனிவாச கவுடாவுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்று ட்விட்டரில் பதிலளித்து உள்ளார்.
இத்தகைய திறமைக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.அவருடைய திறமையை மெருகேற்றினால் நிச்சயம் இந்தியா பதங்களை வெல்லும் என்கின்றனர் விளையாட்டு நோக்கர்கள்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியே ஊழல் தான் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிகார வெறியோடு அமைக்கப்பட்டுள்ள இந்த…
லக்னோ : நடப்பு ஐபிஎல் போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கையில், இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல்…
சென்னை : இன்று ஐபிஎல் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது. முதல் போட்டி மதியம் 3:30மணிக்கு லக்னோ மற்றும் குஜராத்…
சென்னை : ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் ஒரு பலமான அணியாக பார்க்கப்பட்ட சென்னை அணி, இந்த சீசனில் பரிதாபமாக…
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…