டி20 உலகக்கோப்பையை ரோஹித் சர்மா வாங்கிக்கொடுப்பார் – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் அடுத்த வாரம் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என நேற்று பிசிசிஐ அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், ரோஹித் ஷர்மா கண்டிப்பாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்றும் கடந்த ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்ததை இந்த முறை டி-20 போட்டிகளில் விளையாடி கோப்பையை வென்று கொடுப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ள டி20 போட்டிகளில் இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா என்று அறிவிப்பு வெளியானவுடன் கண்டிப்பாக அவர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 போட்டியில் விளையாடுவார் என்று தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஷாகிப் அல் ஹசன்..!
கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் அவர் ரொம்பவே வேதனை அடைந்தார். எனவே, கண்டிப்பாக வரும் வரும் ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை விளையாடி அதனை வெண்றுவிட்டு வெளியேற விரும்புவார்.
எனவே, கண்டிப்பாக இந்த முறை நன்றாக விளையாடி இந்திய அணியை கோப்பையை வெல்ல வைக்கவேண்டும் என்று ரோஹித் விளையாடுவார். இருந்தாலும் ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் என்பது மிகவும் பெரிய போட்டிகளில் ஒன்று. அதற்கு அடுத்தபடியாக டி20 போட்டிகள் உள்ளது. எனவே, கடந்த ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட டி20 உலகக்கோப்பை போட்டியில் வென்றாலும் ரோஹித் சர்மாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் ” எனவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.