வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா தேர்வு.!
- இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருடாவருடம் விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
- இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளர்களாக இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகியோர் தேர்வு .
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் வருடாவருடம் விருது வழங்கும் விழா ஜனவரி 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதிற்கு இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தமிழகத்தை சேர்ந்தவர்.இவர் 43 போட்டிகளில் 2 சதம் உள்பட 2062 ரன்களும் , 146 ஒரு நாள் போட்டிகளில் 4 சதம் உள்பட 4,091 ரன்களும் அடித்து உள்ளார்.
1983-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது ஸ்ரீகாந்த் அந்த உலக கோப்பையின் இறுதி போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார். டெல்லியைச் சேர்ந்தவர் அஞ்சும் சோப்ரா.இவர் 12 போட்டிகளில் 548 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் ,18 அரைசதம் உள்பட 2,856 ரன்களும் எடுத்துள்ளார். மேலும் 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.