இலங்கை அணியின் முன்னணி வீரர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.!

Default Image
  • சமரா கப்புகெதர , இலங்கை ஜம்பவன் ஜெயவர்த்தன இடத்திற்கு சரியான வீரர்  என ரசிகர்களால் புகழப்பட்டார்.
  • இந்நிலையில் சமரா கப்புகெதர அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அணியின் சமரா கப்புகெதர அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் இலங்கை அணிக்கு அறிமுகமானவர்.

இவர் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 ரன்களும் ,102  ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1624 ரன்களும் , 43 டி 20 போட்டிகளில் விளையாடி 703 ரன்கள் எடுத்துள்ளார். இவர் கடைசியாக இவர் 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக விளையாடினார்.

இவர் இலங்கை ஜம்பவன் ஜெயவர்த்தன இடத்திற்கு சரியான வீரர்  என ரசிகர்களால் புகழப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பை சமரா கப்புகெதர சரியாகபயன்படுத்ததால் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சமரா கப்புகெதர அனைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்