24 மணிநேரத்தில் சாதனை படைத்த இலங்கை வீராங்கனை..! 66 பந்தில் 113ரன்கள் விளாசல் ..!

Default Image

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர். நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து  217 ரன்கள் அடித்தனர். அதன் பின்னர் 218 ரன்களுடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இப்போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் சாமரி என்ற வீராங்கனை  66 பந்தில் 6 சிக்சர், 12 பவுண்டரி என 113 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் சேஸிங்கில் சதம் அடித்த இரண்டாவது கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் நேபாள அணி கேப்டன் பராஸ் 52 பந்தில் 106 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் சேஸிங்கில்  சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

இவர் இந்த சாதனையை செய்த அடுத்த 24 மணி நேரத்தில் சாமரி சேஸிங்கில் சதம் அடித்து அப்பட்டியலில் இணைந்து உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen