பாகிஸ்தானில் சுற்று பயணம் செய்து அதிக ரன்கள் அடித்த பட்டியலில் இலங்கை வீரர்கள்..!

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
நேற்றைய போட்டியில் இலங்கை வீரர் ஓஷாடா 78* ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதனால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஓஷாடா முதல் இடத்தில் உள்ளார்.
இதற்கு முன் கடந்த 07-தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை வீரர் பானுகா ராஜபக்ஷ 77 ரன்கள் அடித்தார்.அதுவே அதிகபட்ச ரன்னாக இருந்தது.அதை முறியடித்து தற்போது ஓஷாடா முதல் இடத்தில் உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025