திருமணம் செய்வதாக கூறிய ரசிகைக்கு அழகாக பதில் அளித்த இலங்கை வீரர்.!குவியும் பாராட்டுக்கள் .!
- ஆல்ரவுண்டர் இசுரு உடனாவை ரசிகை ஒருவர் திருமணம் செய்ய விரும்புவதாக பதாகையை காட்டினார்.
- இதற்கு இசுரு உடனா திருமணம் ஆகி விட்டதாக கூறி திருமணத்திற்கு மாற்றிக் கொண்டு மோதிரத்தை காட்டினார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் போட்டியான மசான்சி சூப்பர் லீக் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இந்த தொடரின் போட்டிகள் தென்னாபிரிக்காவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
இந்த தொடரில் பல்வேறு நாட்டைச் சார்ந்த வீரர்களும் விளையாடினர். இந்நிலையில் இறுதிப்போட்டியில் பார்ல் ராக்ஸ் Vs த்வானே ஸ்பார்டன்ஸ் அணியும் மோதினர். இப்போட்டியில் பார்ல் ராக்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைபற்றியது.
#MSLT20 #MslT20Final fan moment @IAmIsuru17 very good answer I have allredy one ring pic.twitter.com/Us199QNi6K
— mohamed arsath (@BmArsath1) December 16, 2019
இப்போட்டியில் பார்ல் ராக்ஸ் அணிக்காக விளையாடிய இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் இசுரு உடனாவிற்கு மைதானத்தில் இருந்தபடி ரசிகை ஒருவர் இசுரு உடனாவை திருமணம் செய்ய விரும்புவதாக பதாகையை காட்டினார். அதற்கு இலங்கை வீரர் இசுரு உடனா தனக்கு திருமணம் ஆகி விட்டதாக கூறி திருமணத்திற்கு மாற்றிக்கொண்டு மோதிரம் போட்டிருந்த விரலை காட்டினார்.
அந்த புகைப்படத்தை இணையவாசிகள் தற்போது பதிவிட்டு சிறப்பாக பதிலளித்த இசுரு உடனாவை பாராட்டி வருகின்றனர்.