இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டியில் இலங்கை அணி வென்று தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.
நேற்று மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஓஷாடா 78 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர் 3 விக்கெட்டுகளை பறித்தார்.
பின்னர் 148 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் அதிகபட்சமாக ஹரிஸ் சோஹைல் 52 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் வாணிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 3 -0 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஒய்ட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது.
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…