ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?
Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார்.
இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடு பட்டுவருகின்றனர். இந்தியாவின் ஈட்டி எறிதல் போட்டியில் வல்லவரான ‘நீரஜ் சோப்ரா’ மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியின் வல்லவரான முரளி ஸ்ரீசங்கர் என இந்த முறை இரண்டு தங்க பதக்கங்களை இந்த ஒலிம்பிக்கில் உறுதியாக வென்று விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கேரளா, பாலக்காடை சேர்ந்த 25 வயதான முரளி ஸ்ரீசங்கர் தற்போது இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். இது அவரது ஒலிம்பிக் கனவையும், இந்தியாவின் கனவையும் சிதைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தீவர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இவருக்கு முட்டியில் பலமான காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இவர்க்கு பரிசோதனைகள் பல செய்தனர். அதன் பின் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்த போது இந்த காயத்திற்கு கட்டாயம் அறுவை சிகிச்சை செய்வதே சிறந்த ஒன்றாகும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் விரைவில் அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராக உள்ளார்.
இதன் காரணமாக அவரது பாரிஸ் ஒலிம்பிக் கனவு தகர்ந்துள்ளது. மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கையும் தாண்டி இந்த ஆண்டு முழுவதும் அவரால் எந்த ஒரு நீளம் தாண்டும் போட்டியிலும் கலந்து கொள்ள முடியாது எனவும் அவரை தனது X தளத்தில் தெரிவித்துள்ளனர். இது குறித்து X தளத்தில் பேசிய அவர், “நமது வாழ்க்கையில் இது போன்ற எதிர்ப்பாராத நிகழ்வுகள் நடைபெறும். நாம அதை முழுமையாக ஏற்று கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.
நானும் மீண்டு வருவேன் அதே நேரம் உங்களது அன்பும், பிரார்த்தனையும் எனக்கு தேவைப்படுகிறது”, என்று அவரது X தளத்தில் பதிவிட்டு இருந்தார். இவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் ஆசிய தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கமும், 2022-ல் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கமும் மேலும் அதே ஆண்டில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.