விளையாட்டும், வீரர்களும்.. நீரஜ் சோப்ரா திருமணம் முதல் ரொனால்டோ பயிற்சி வரை.!

Neeraj Chopra - Ricky Ponting - Ronaldo

சென்னை : இன்றைய நாளில் முக்கிய விளையாட்டு செய்திகளில், நீரஜ் சோப்ரா – மனு பாக்கர் திருமணம் சர்ச்சை முதல் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ செய்யும் பயிற்சி வரை உள்ள நிகழ்வுகளை பார்க்கலாம்.

நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் திருமணம் உண்மையா.?

நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பதக்கங்களை வென்றவர்கள் தான் நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும். இருவரும் திருமணம் செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மனு பாக்கரின் தந்தை, நீரஜ் சோப்ராவுக்கும், மனு பாக்கருக்கும் திருமணம் என வெளியான தகவல் அனைத்தும் வெறும் வதந்தியே என விளக்கம் அளித்துள்ளார்.

பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பிரமோத் பகத்-க்கு தடை.!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், ஊக்க மருந்து சோதனை தொடர்பான விதிமுறைகளை மீறியதன் காரணமாக பாரிஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 3 முறை விதிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து ஒன்றறை வருடங்கள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டுள்ளது.

அர்ஷத் நதீமுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்.!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அர்ஷத் நதீமை, பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் போட்டிகளின் தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஜேசன் கில்லெஸ்பி, கவுரவிக்கும் விதமாக பாகிஸ்தான் ட்ரெஸ்ஸிங் அறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெற்றி பெற்ற எண் கொண்ட நம்பர் பிளேட் ..அர்சத் நதீமை கவுரவித்த பஞ்சாப் மாகாண முதலமைச்சர்.!

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 92.97 மீட்டருக்கு ஈட்டி எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார் பாகிஸ்தான் வீரரான அர்சத் நதீம். இவரை கவுரவிக்கும் விதமாக பஞ்சாப் மாகாண முதலமைச்சரான மர்யம் நவாஸ் 92.97 என்ற நம்பர் பிளேட் கொண்ட ஹோண்டா சிவிக் காரை பரிசாக வழங்கியுள்ளார். மேலும், அவரை நேரில் சந்தித்து சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான காசோலையும் வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியா-வங்கதேச தொடரில் மாற்றம்.!

இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டி20 போட்டி, அக்டோபர் 6ஆம் தேதி, தர்மசாலாவில்தான் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு ஓய்வு அறையில் பராமரிப்பு வேலை நடைபெறுவதால், மத்தியபிரதேசத்தில் உள்ள குவாலியர் மைதானத்தில், முதல் டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்..ரிக்கி பாண்டிங் நம்பிக்கை..!

இந்த ஆண்டின் இறுதியில் அதாவது வரும் நவம்பர் மாதத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெரும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

மீண்டும் ஐபிஎல்-லில் ஸ்டீவ் ஸ்மித் ..!

அடுத்த ஆண்டில் நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித், தனது பெயரை மீண்டும் கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோவில் மாஸ் பிக்ஸ் இணையத்தில் வைரல்.!

சவூதியில் நடைபெறும் சவூதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் நட்சத்திர அணியான அல் நாசர் அணிக்காக ரொனால்டோ விளையாடி வருகிறார். நேற்று அவரது எக்ஸ் தளத்தில் அந்த அணிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த புகைப்படங்களை அவர் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today live 05 03 2025
blue ghost mission 1
Singer Kalpana
South Africa vs New Zealand
Rajinikanth watched Dragon
Southern Railway
Sivaji Ganesan's house