கடந்த 11-ம் தேதி இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் கே.எல் ராகுல் 91 , துணை கேப்டன் ரோகித் சர்மா 71 , கேப்டன் விராட் கோலி 70 ரன்கள் குவித்தனர்.இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அணி 241 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இலக்காக வைக்கப்பட்டது.
ஆனால் பின்னர் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
போட்டி முடிந்த பின் பேசிய விராட் கோலி , முதலில் பேட்டிங் செய்தால் எப்படி வெற்றி பெறுவது குறித்து பல பேசி இருந்தோம்.ஆனால் களத்தில் திட்டங்களை செயல்படுத்துவது தான் முக்கியம். என் பேட்டிங்கில் வித்தியாசமான அணுகுமுறையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த போட்டி அமைந்தது.
நான் கே.எல் ராகுலிடம் நீ கடைசிவரை நின்று விளையாடு நான் மறு பக்கம் அதிரடி ஷாட்டுகளை வெளிப்படுத்துகிறேன் என கூறி அதன்படியே விளையாடினேன். என்னால் மூன்று வடிவிலான போட்டியிலும் ரன் குவிக்க முடியும். எல்லாமே மனம் கவனம் செலுத்துவதில் தான் இருக்கிறது.
விராட் கோலி மேலும் கூறுகையில், இன்னொரு வகையில் இந்த இன்னிங்ஸ் எனக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. எனக்கு திருமணமாகி இன்றுடன் (புதன்கிழமை உடன் ) இரண்டு ஆண்டு ஆகிறது. இந்த தொடரை வென்றது எனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு நான் வழங்கும் திருமண நாள் சிறப்பு பரிசு. அந்த வகையில் இது மறக்க முடியாத இரவாகும்’ என கூறினார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…