ஃபிரான்ஸ் அதிர்ச்சி தோல்வி ..! 2-1 என முன்னிலை பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறிய ஸ்பெயின் ..!
யூரோ கோப்பை : இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற யூரோ கோப்பை தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி அபாரம்.
கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று யூரோ கோப்பை தொடரானது ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை கொண்ட இந்த தொடர் தற்போது அரை இறுதி போட்டி வரை எட்டியுள்ளது. இதனால், இன்று நடைபெற்ற இந்த தொடரின் அரை இறுதி போட்டியில் ஃபிரான்ஸ் அணியும், ஸ்பெயின் அணியும் மோதியது.
எப்போதும் போல விறுவிறுப்பாக தொடங்கிய போட்டியில் ஃபிரான்ஸ் அணி முதலில் தீவிர ஆதிக்கத்தை செலுத்தியது. அதிலும் முதல் 5’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பையும் தவறவிட்டது. அதனை தொடர்ந்து 4′ நிமிடங்களுக்கு பிறகு ஃபிரான்ஸ் அணி வீரரான கோலோ முவானி சரியாக 9′ தாவது நிமிடத்தில் ஒரு அபாரமான கோலை அடித்து கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் ஃபிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது, ஆனாலும் ஸ்பெயின் அணி விடாமல் முயற்சி செய்து சரியாக 21’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் வீரரான யமல் ஸ்பெயின் அணிக்கான முதல் கோலை பதிவு செய்ததுடன், சமன் செய்யும் கோலையும் பதிவு செய்தார். இதனால் 1-1 என ஸ்பெயின் அணி சமன் செய்தனர்.
இந்த கோல் அடித்ததன் மூலம் யூரோ கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வயது குறைந்த இளம் வீரராக முதல் ஆளாக மாறினார் ஸ்பெயின் அணியின் லாமின் யமல். இந்த கோல் மூலம் போட்டியானது மேலும் விறுவிறுப்பாக சென்றது, அதனை தொடர்ந்து 25’வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மற்றொரு வீரரான ஓல்மோ 2-வது கோலை அடித்து ஸ்பெயின் அணியை முன்னிலை பெற செய்தார்.
இதன் மூலம் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை வகித்தது, நடைபெற்ற இந்த போட்டியில் முதல் அரை மணி நேரத்திலேயே போட்டி முடிந்தது என கூறலாம். மேற்கொண்டு நடந்த இந்த போட்டியில் ஃபிரான்ஸ் அணி கடுமையாக முயற்சி செய்தும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என ஸ்பெயின் அணி ஃபிரான்ஸ் அணியை வீழ்த்தி யூரோ கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
மேலும், நாளை அதிகாலை நெதர்லாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் அரை இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணி ஸ்பெயின் அணியுடன் இறுதி போட்டியில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.