தெற்காசிய கால்பந்து: அரையிறுதிக்கு சென்ற இந்திய அணி…!
காத்மண்டுவில் தற்போது பதினெட்டு வயதினருக்கான சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த ஆறு அணிகளையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் ” பி” பிரிவில் இந்திய அணியும் , வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. இந்திய அணி தனது முதல் போட்டியை வங்கதேச அணி உடன் மோதியது. இறுதியில் இப்போட்டி டிராவில் முடிந்தது.
3⃣ Goals
???? Of the TableIndia came up with the late goals to book their spot in the semifinal ????????#SAFFU18 ???? #BackTheBlue ???? #IndianFootball ⚽ pic.twitter.com/eWojBLkUQv
— Indian Football Team (@IndianFootball) September 26, 2019
இதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் இரண்டாவது போட்டியில் இந்திய அணி மோதியது. இப்போட்டியில் குர்கிரத் இரண்டு கோல்களும் , அமன் செத்ரி ஒரு கோல்களும் அடிக்க 3 -0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் நான்கு புள்ளிகளை பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. அரையிறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் மாலத்தீவு அணியை , இந்திய அணி சந்திக்க உள்ளது.