தென்னாப்பிரிக்க அணி பாலோ-ஆன்..! 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாபிரிக்கா..!

Published by
murugan

இந்தியா , தென்னாபிரிக்கா இடையே  இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்கள் எடுத்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது.
இதில் அதிகபட்சமாக விராட்கோலி 254 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்கள் எடுத்த போது 8 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வந்தது.
Image
அப்போது ஒன்பதாவது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடிய மகாராஜா 72 ரன்கள் குவித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டும் , உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுத்தனர். இதனால் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இது தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் ஐடன் மார்க்ராம் வெளியேறினார். பின்னர்  இறங்கிய டி ப்ரூயின் 8 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் டீன் எல்கர் நிதானமாக விளையாடி அரைசதம் அடிக்காமல் 48 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் , குவின்டன் டி காக் இருவரும்  5 ரன்களில் வெளியேறினார். தற்போது தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Published by
murugan

Recent Posts

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

3 minutes ago

மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…

33 minutes ago

“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…

41 minutes ago

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்… பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…

1 hour ago

துவங்கியது இறுதி ஊர்வலம்… யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்.!

டெல்லி:  மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…

2 hours ago

சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம்… அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு.!

டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…

3 hours ago