தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Published by
murugan

தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் ரன்கள் எடுத்தனர்.

தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்டையும், நந்த்ரே பெர்கர் 3  விக்கெட்டையும் பறித்தனர். இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டை இழந்து  408 ரன்கள் எடுத்து  163 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்திய அணியில் பும்ரா 4, முகமது சிராஜ் தலா 2 , ஷர்துல் தாக்கூர் , பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் பறித்தனர்.

தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக டேவிட் பெடிங்காம் 56 ரன்களும்,  டீன் எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜான்சன் 84* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் பாதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர்.முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா ஐந்து ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்ஸில்  சிறப்பாக விளையாடுவார் என  எதிர்பார்த்து நிலையில் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதை எடுத்து சுப்மன் கில் களமிறங்க மறுபுறம் விளையாடிய  யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐந்து ரன்னில் விக்கெட்டை இழந்தார். பிறகு விராட் கோலி களம் கண்டார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 26 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க பின்னர் களமிறங்கிய அனைத்து இந்திய வீரர்களும் ஒற்றைஇலக்கு  ரண்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர்.அதன்படி, ஷ்ரேயாஸ் ஐயர் 6, கேஎல் ராகுல் 4, ரவிச்சந்திரன் அஷ்வின் 0, ஷர்துல் தாக்கூர் 2,  ஜஸ்பிரித் பும்ரா 0,  முகமது சிராஜ் 4, பிரசித் கிருஷ்ணா 0 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

இதில் விராட் கோலி மட்டும் நிதானமாகவும் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். இறுதியாக இந்திய அணி 34.1ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.  தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக  நந்த்ரே பெர்கர் 4,  மார்கோ ஜான்சன்3 , ரபாடா  2  விக்கெட்டுகளை பறித்தனர்.

Recent Posts

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

3 minutes ago

“ஆளுநர் ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்”..திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் தீர்மானம்!

சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…

5 minutes ago

8 இடங்களில் செயின் பறிப்பு : மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது – அண்ணாமலை!

சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…

17 minutes ago

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

1 hour ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

1 hour ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

1 hour ago