இந்தியா , தென்ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் பறிகொடுத்து 502 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் 176 ரன்னும் , மயங்க் அகர்வால் 215 ரன்கள் அடித்தனர்.
இதை தொடர்ந்து நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கி தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டை பறிகொடுத்து இருந்தது. இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாபிரிக்க அணி ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் பவுமா 18 ரன்களுடன் வெளியேறினார்.
இதையடுத்து கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் தொடக்க வீரர் எல்கருர் இருவரும் நிதானமாக ஆடி அணியின் எண்ணிக்கை உயர்த்தினார். சிறப்பாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் அரைசதம் அடித்து 55 வெளியேறினார்.
பின்னர் தொடர்ந்து விளையாடி வந்த எல்கருர் 175 பந்தில் சதம் அடித்தார். இது இவர் டெஸ்ட் போட்டியில் அடித்த 12வது சதம் ஆகும்.தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 291 ரன்கள் அடித்து உள்ளது.
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…