SAvIND:முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலையில் தென்னாபிரிக்கா ..!

தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய  இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 67.4 ஓவருக்கு 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் தாக்கூர் 24 ரன்கள் எடுத்தனர்.

தென்னாபிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டையும், நந்த்ரே பெர்கர் 3 , மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி தலா 1 விக்கெட்டையும் பறித்தனர். இதைத்தொடர்ந்து,தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம், டீன் எல்கர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ஐடன் மார்க்ராம் 5 ரன் வெளியேற அடுத்து வந்த டோனி டி ஜோர்ஜி 28 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அன்று 199, இன்று 185.. டீன் எல்கர் கனவை கலைத்த ஷர்துல் தாக்கூர்

அடுத்து களமிறங்கிய கீகன் பீட்டர்சன் வந்த வேகத்தில் 2 ரன்னில் பெவிலியன் திரும்ப அடுத்து வந்த டேவிட் பெடிங்காம் 80 பந்தில் அரைசதம் கடந்து 56 ரன்னில் போல்ட் ஆனார். நேற்றைய  2-ம் நாள் முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டை இழந்து 256 ரன்கள் எடுத்து 11 ரன்கள் முன்னிலையில் இருந்தது. களத்தில் டீன் எல்கர் 140* , மார்கோ ஜான்சன் 3* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. களத்தில் இருந்த டீன் எல்கர் சிறப்பாக விளையாடி வந்ததால் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 185 ரன்கள் எடுத்து ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த  ஜெரால்ட் கோட்ஸி 19 ,  ரபாடா 1,  நந்த்ரே பெர்கர் டக் அவுட் ஆகி நடையை கட்டினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய மார்கோ ஜான்சன்  நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 147 பந்தில் 84* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இதனால் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டை இழந்து 408 ரன்கள் எடுத்து 163 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் பும்ரா 4, முகமது சிராஜ் தலா 2 , ஷர்துல் தாக்கூர் ,பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் பறித்துள்ளனர்.பும்ரா முதல் இன்னிங்ஸில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு டெஸ்டில் விளையாடி செஞ்சூரியனில் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்