இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைதொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவருமே ஒரு ரன்கள் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 29 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த ரிங்கு சிங், சூர்யா குமார் யாதவ் சிறப்பாக விளையாடி இருவரும் அரை சதம் அடித்து அணியின் ரன்களை உயர்த்தினர். சூர்யா குமார் யாதவ் அரைசதம் அடுத்த சில நிமிடங்களில் 56 ரன்கள் எடுத்து விக்கெட் இழந்தார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா ஒரு ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 19 ரன்களிலும், அர்ஷ்தீப் சிங் டக் அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி ஓவரின் மூன்று பந்துகள் வீசியபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இறுதியாக இந்திய அணி 19.3 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 180 ரன்கள் எடுத்தது.
ரிங்கு சிங் மட்டும் 68* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். தென்னாப்பிரிக்கா அணியில் ஜெரால்ட் கோட்ஸி 3 விக்கெட்டையும், தப்ரைஸ் ஷம்சி, லிசாட் வில்லியம்ஸ், மார்கோ ஜான்சன், அண்டில் , ஐடன் மார்க்ரம் தலா 1 விக்கெட்டை பறித்தனர். போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த்- லூயிஸ் முறைப்படி 15 ஓவராக குறைக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு 152 இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 49 , ஐடன் மார்க்ரம் 30 , டேவிட் மில்லர் 17 , மேத்யூ ப்ரீட்ஸ்கே 16 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் முகேஷ் குமார் 2 விக்கெட்டையும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
மூன்று போட்டி கொண்டு தொடரில் 1-0 என்று கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…