சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த சௌமியா சர்கார்..!

Published by
murugan

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை குறுக்கிட்டதால் டிஎல்எஸ் முறைப்படி நியூசிலாந்து 44 ரன்களில் வெற்றிப்பெற்றது.

இதைத்தொடர்ந்து, பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச கிரிக்கெட் வீரர் சௌமியா சர்கார் முறியடித்தார். அவர் நியூசிலாந்துக்கு எதிராக 169 ரன்கள் எடுத்தார்.

கடந்த 2009-ல் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 163* ரன்கள் எடுத்ததே ஆசிய அணிகளில் உள்ள ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கடந்த 14 ஆண்டுகளில் நியூசிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை ஆசிய அணியில்  உள்ள  வேறு எந்த பேட்ஸ்மேனும் முறியடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று சௌமியா சர்கார் 169 ரன்கள் எடுத்து முறியடித்தார்.

நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 291 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் தொடக்க வீரர் சௌமியா சர்க்கார் 151 பந்துகளில் 22 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 169 ரன்கள் குவித்தார். மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் 57 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் 46.2 ஓவரில் 296 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டை பறிகொடுத்து  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி நியூசிலாந்து அணியில் வில் யங் 89 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ்  95 ரன்களும்,  தொடக்க வீரர்  ரச்சின் ரவீந்திரா 45 ரன்களும் எடுத்து சிறப்பாக ஆடினார்.

சௌமியா சர்கார் தனது சிறப்பான ஆட்டத்திற்காக ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ விருது பெற்றார். முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ளது.

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

4 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

4 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

5 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

7 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

7 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

8 hours ago