மன்னிக்கவும் நண்பர்களே..! தீபக் சஹாரின் உருக்கமான ட்வீட்டர் பதிவு…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மன்னிக்கவும் நண்பர்களே, துரதிஷ்டவசமாக, காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து நான் வெளியேறுகிறேன் என தீபக் சஹார் ட்வீட்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் எங்களின் முக்கிய பந்துவீச்சாளர்கள் எங்களிடம் இல்லாததால் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம்.
ஆனால் காயங்கள் ஆட்டத்தின் ஒரு பகுதியாகும். தீபக் சஹார் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தீபக் சஹார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மன்னிக்கவும் நண்பர்களே, துரதிஷ்டவசமாக, காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து நான் வெளியேறுகிறேன்.
உண்மையில் விளையாட ஆவலுடன் இருந்தேன். ஆனால் என்னால் விளையாட முடியவில்லை. நான் முன்பு போல் மீண்டும் வலுவாக வருவேன். என்னை அன்புடன் ஆதரித்த அனைவருக்கும் நன்றி. விரைவில் சந்திப்போம்.’ என பதிவிட்டுள்ளார்.
— Deepak chahar ???????? (@deepak_chahar9) April 15, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)