உள்ளூர் போட்டியான ராஞ்சி கோப்பை தொடர் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியாவில் உள்ள முக்கியமான மாநில அணிகள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விஜயவாடா மற்றும் ஆந்திரா அணிகளுக்கிடையில் முதல் போட்டி தொடங்கியது.
இப்போட்டி விஜயவாடாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. விஜயவாடா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து விஜயவாடா அணி வீரர்கள் மைதானத்திற்குள் நுழைந்து நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மைதானத்திற்குள் யாரும் எதிர்பாராத நேரத்தில் பாம்பு ஒன்று அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது. இதனால் பொதி ஆரம்பிக்க சிறிது காலதாமதமானது. இதை தொடர்ந்து பாம்பை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்திய பிறகு போட்டி தொடங்கியது.
மைதானத்தில் பாம்பு சுற்றி கொண்டு இருந்ததை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. மேலும் நேற்று முதலில் இறங்கிய ஆந்திரா அணி 74 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 211 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஹனுமா விஹாரி 83 ரன்கள் குவித்தார். ஆதித்யா சர்வதே 4 விக்கெட்டையும் , ரஜ்னீஷ் குர்பானி 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய விஜயவாடா அணி விளையாடியது. நேற்றைய ஆட்ட முடிவில் விஜயவாடா அணி விக்கெட்டை இழக்காமல் 26 ரன்கள் எடுத்தது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…