ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்.! பின் தங்கிய ஸ்மிருதி மந்தனா.!
எம்ஆர்எஃப் டயர்ஸ் ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் (ICC Women’s T20i Player Rankings) தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பேட்டர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலியா அணி வீராங்கனை தஹ்லியா மெக்ராத் 794 புள்ளிகளுடன் முதலிடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளார். இரண்டாவதாக பெத் மூனி 764 புள்ளிகளுடன் உள்ளார்.
ஐந்தாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் லாரா வோல்வார்ட், கடைசியாக வங்கதேசத்திற்கு எதிரான டி20ஐ தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 49* ரன்கள் எடுத்தார். இதனால் பேட்டர்களுக்கான தரவரிசையில் வோல்வார்ட் இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
‘நான் அவசரப்படவில்லை…’ தனது ஓய்வு குறித்து மனம் திறந்தார் ஸ்டீவ் ஸ்மித்!
முன்னதாக மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 709 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்குப் பின் தங்கியுள்ளார். மேலும், லாரா வோல்வார்ட் மற்றும் முதல் இடத்தில் இருக்கும் தஹ்லியா மெக்ராத்கும் இடையில் வெறும் 71 புள்ளிகள் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, பந்துவீச்சுத் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் நோன்குலுலேகோ ம்லபா மற்றும் ஆஸ்திரேலியாவின் டார்சி பிரவுன் இருவரும் தலா 722 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்கள். நான்காவது இடத்தில் இருந்த இந்தியாவின் தீப்தி ஷர்மா இரண்டு இடங்கள் பின்தங்கி 711 புள்ளிகளுடன் 6 வது இடத்தில உள்ளார்.
பிரமாண்ட சிக்ஸர்… ஜன்னல் கண்ணாடியை உடைத்த இந்திய வீரர் ரிங்கு சிங்!
குறிப்பிடத்தக்க வகையில், ரேணுகா சிங் 7 இடங்கள் முன்னேறி, அதே 711 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆல்-ரௌண்டர் தரவரிசையில் தென்னாப்பிரிக்காவின் ஹெய்லி மேத்யூஸ் 498 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் அமேலியா கெர் 420 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாவது இடத்தில் இருந்த ஆஷ்லீக் கார்ட்னர் 419 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு பின் தாங்கினார். இந்திய அணியின் தீப்தி ஷர்மா 371 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் தக்கவைக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.