நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். முதல் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கி நேற்று முடிந்தது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.
இரண்டாவது போட்டி வருகின்ற 26 -ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைப்பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 928 புள்ளிகள் எடுத்த நிலையில் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 43 , இரண்டாவது இன்னிங்சில் 16 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 911 புள்ளிகள் பெற்று 12 புள்ளிகளை இழந்து மீண்டும் 2-வது இடத்தில் உள்ளார். சுமித்தை விட கோலி 17 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார்.
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன 3-வது இடத்திலும் , புஜாரா 4-வது இடத்திலும், ரஹானே 6-வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 143 ,இரண்டாவது இன்னிங்சில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் 786 புள்ளிகள் பெற்று 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…