ஜிம்பாப்வே , சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற சிங்கப்பூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
20 ஓவர் முடிவில் சிங்கப்பூர் அணி 3 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டிம் டேவிட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார். 152 இலக்குடன் களமிறங்கிய நேபால் அணி தொடக்க வீரராக பராஸ் கட்கா அதிரடியால் 16 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பராஸ் 106 ரன்கள் அடித்தார். இதன் மூலம் டி20 போட்டியில் உலக சாதனை படைத்து உள்ளார். டி20 போட்டியில் சேஸிங்கில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் டி20 போட்டியில் சதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சேஸிங்கில் ஸ்மித் இங்கிலாந்து அணிக்கு எதிராக 90 ரன்களும் ,கிறிஸ் கெய்ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 88 ரன்களும் , கோலி இலங்கை அணிக்கு எதிராக 82 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…