‘லப்பர் பந்துக்கு’ குவியும் ரிவ்யூ சிக்ஸர்! படம் பார்த்து ஹர்பஜன் சொன்ன விஷயம்?

லப்பர் பந்து படத்தை பார்த்து அஸ்வின் பாராட்டியதை தொடர்ந்து ஹர்பஜன் சிங் படம் பார்த்துவிட்டு படக்குழுவை எக்ஸ் வலைதள பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

lubber pandhu harbhajan singh

சென்னை : லப்பர் பந்து திரைப்படம் வசூலில் பனைமர உயரத்துக்கு சிக்ஸர் விளாசி வருவதுபோல, விமர்சன ரீதியாகவும் பல பிரபலங்களிடம் பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. படத்தைப் பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பாராட்டுவதோடு கிரிக்கெட்டைச் சேர்ந்த பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

அதற்கு முக்கியமான காரணமே, இந்த திரைப்படம் கிரிக்கெட் சார்ந்த கதையம்சத்தை வைத்து எடுக்கப்பட்டது தான். இதன் காரணமாக கிரிக்கெட் பிரபலங்கள் படத்தை விரும்பி பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே, இந்த படத்தைப் பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் படத்தைப் பாராட்டி இருந்தார்.

அவரை தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படம் பார்த்துவிட்டு ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பாராட்டி இருக்கிறார். அதாவது, ” ஹர்பஜன் சிங் அடுத்ததாகப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்தினுடைய படக்குழு லப்பர் பந்து எனும் கிராமத்து கிரிக்கெட் சப்ஜெக்ட் சும்மா அட்டகாசமா இருக்கிறது பாருங்கள் என கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் கூறியவுடன் ஹர்பஜன் சிங் படத்தினை பார்த்து இருக்கிறார். அவருக்குப் படம் பார்த்தவுடன் மிகவும் பிடித்துப் போக “. கிரிக்கெட் மேல நீங்க வெச்ச காதல் ஜெயிச்சிருச்சு மாறா” என ஒரே வார்த்தையில் படம் நன்றாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். மேலும். ரப்பர் பந்து திரைப்படம் தமிழில் மட்டும் தான் வெளியாகி இருக்கிறது. அத்துடன் படமும் சின்ன பட்ஜெட் படம் தான்.

எனவே, இந்த மாதிரி நல்ல படத்தைத் தமிழ் சினிமாவை தாண்டி பல மொழிகளுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பது பலருடைய ஆசை. எனவே, மற்ற மொழிகளுக்கும் தெரியப் படுத்தும் வகையில், ஹர்பஜன் போன்ற பெரிய பிரபலம் படத்தைப் பாராட்டியுள்ளார். மேலும், ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளது விளம்பரம் மட்டுமின்றி படக்குழுவுக்கு இது மிகப்பெரிய வெற்றி எனவும் பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்