சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
பந்தை கையில் எடுத்தவுடன் பழைய அணி என்பது மறந்துவிட்டது என குஜராத் வேக பந்துவீச்சாளர் சிராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி வருவதற்கு காரணமே பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியது தான். கடந்த சில ஆண்டுகளாக அவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் விடுவித்தது. எனவே, குஜராத் அணி அவரை 12.25 கோடி கொடுத்து வாங்கியது.
எனவே, குஜராத் அணிக்கும் சிராஜ் விளையாடிய முந்தைய அணியான பெங்களூர் அணிக்கும் எப்போது போட்டி நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அது நேற்று நடைபெற்ற போட்டியில் நிறைவேறியது. இந்த போட்டியில் குஜராத் அணி தான் அசத்தல் வெற்றிபெற்று பெங்களூர் அணியை அதனுடைய சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் வைத்தே வீழ்த்தியது. பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமே சிராஜ் என்று சொல்லலாம்.
ஏனென்றால், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தபோது 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், பெரிய சிக்ஸர் ஒன்றை கொடுத்து தரமான போல்ட் விக்கெட்டும் எடுத்தார். ஐந்தாவது ஓவரில், RCB தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் (Phil Salt), குஜராத் டைட்டன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை (Mohammed Siraj) எதிர்கொண்டார். ஓவரின் மூன்றாவது பந்தில், சால்ட் ஒரு அபாரமான 105 மீட்டர் சிக்ஸரை விளாசினார்.
அவர் அடித்த அந்த பந்து மைதானத்தை விட்டே வெளியே சென்றது. இதணை கவனித்த சிராஜ் என்னுடைய பந்தையா சிக்ஸர் அடிக்கிறாய்? இப்போ பாரு என்பது போல அடுத்த பந்திலேயே சிராஜ் பதிலடி கொடுத்தார். முழு வேகத்தில் 144 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை சால்ட் மீண்டும் பெரிய ஷாட் ஆட முயன்றார். ஆனால், பந்து வருவதற்குள் ஏறி விளையாட முயன்ற நிலையில், அவரது பேட்டைத் தாண்டி, அந்த பந்து ஸ்டம்புகளைத் தெறிக்கவிட்டது.
அதைப்போல, சிராஜ் படிக்கல், லிவிங்ஸ்டோன் ஆகிய முக்கிய வீரர்களுடைய விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்த தருணம் பெங்களூரு அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது, மேலும் சிராஜ் தனது முன்னாள் அணியான RCB-க்கு எதிராக “எமனாக” மாறியதையும் காட்டியது.போட்டி முடிந்த பிறகு பேசிய அவர் ” இந்த போட்டியில் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன் என்று நினைக்கிறேன்.
7 ஆண்டுகள் பெங்களூரு அணிக்காக நான் இங்கு ஆடியிருக்கிறேன். இப்போது நீல ஜெர்சியில் களமிறங்கினேன். போட்டியில் விளையாடுவதற்கு முன்பு சில விஷயங்களை யோசித்துக்கொண்டு இருந்தேன். எப்படி விளையாடப்போகிறேன் என்று ஆனால், பந்தை கையில் எடுத்ததும் எல்லாம் மறந்துவிட்டது,” எனவும் சிராஜ் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025