ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறை எழுதினார் ‘ஷ்ரேயஸ் ஐயர்’! ரூ.26.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்!
ஐபிஎல் ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயர்-ஐ 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில் இடம்பெற்ற வீரர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீரர்களை எடுக்க அணிகள் போட்டிபோட்டு வருகிறது.
அந்த வகையில், ஷ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் கடுமையாக போட்டிபோட்டது. ஏலத்தில் இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடி கொடுத்து தங்களுடைய அணிக்கு எடுத்துள்ளது.
இந்த அளவுக்கு ஷ்ரேயாஸ் ஐயருக்கு டிமாண்ட் இருப்பதற்கான முக்கிய காரணமே கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிறப்பாக கொல்கத்தா அணியை வழிநடத்தி அணிக்கு கோப்பையை வாங்கி கொடுத்தது தான். எனவே, இவரை போல ஒரு வீரர் நம்மளுடைய அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் ஏலத்தில் கடுமையாக போட்டிபோட்டது. இந்த ஏலத்தில் இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடி கொடுத்து தட்டிதூக்கியது.
ஐபிஎல் வரலாற்று ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான தொகைக்கு விற்பனையான வீரர் என்ற சாதனையையும் ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். முன்னதாக மிட்செல் ஸ்டார்க் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ரூ. 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது தான் அதிக தொகையாக இருந்தது. தற்போது அந்த தொகையை மிஞ்சும் அளவுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்துள்ளார்.