ஸ்ரேயாஸ் ஐயரை கழட்டிவிட்டதா கொல்கத்தா? உண்மையை உடைத்த சிஇஓ!
ஐபிஎல் 2025 தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரை தக்க வைக்காமல் விடுவிக்கப்பட்டது குறித்து கொல்கத்தா அணியின் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
கொல்கத்தா : அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த தொடருக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்விட் எடு கொண்டாடு என்கிற வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தங்களுடைய அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் குறித்த அறிவிப்பை 10 அணிகள் வெளியிட்டது.
Read More – ஐபிஎல் 2025 : 10 அணிகளிலும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் இவர்கள் தான்! முழு பட்டியல் இதோ!
அதில் கொல்கத்தா அணியில் ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங் ஆகியோரை தக்க வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இடம்பெறாதது கொல்கத்தா ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதன் காரணமாகக் கொல்கத்தா அணி தான் அவரை எடுக்கவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த சுழலில், இந்த முடிவு எங்களுடையது அல்ல ஸ்ரேயாஸ் தனிப்பட்ட முடிவு எனக் கூறி கொல்கத்தா அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து கொல்கத்தா அணியின் சிஇஓ மைசூர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் தக்க வைப்பது பற்றி முடிவெடுக்க அணி வீரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் உரிமை உள்ளது என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் எங்களுடைய வீரர்களைத் தக்க வைப்பது பற்றிப் பேசிய பெயர்களில் முதலிடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் இருந்தது.
எனவே, அணியில் தக்க வைக்கும்போது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதற்கு அவர் உடன்பட வில்லை என்பதால் அவருடைய முடிவுக்கு மதிப்பளித்து நாங்கள் அவருடைய பெயரை அறிவிக்கவில்லை. அவரிடம் நான் சொன்னேன் நீங்கள் எப்போது திரும்பி வந்தாலும் அணியில் உங்களுக்கான இடம் எப்போதும் இருக்கும். எனவும் கூறியதாக” கொல்கத்தா அணியின் சிஇஓ மைசூர் தெரிவித்துள்ளார்.
மேலும், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் தான் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இந்த சூழலில், கொல்கத்தா அணியில் தொடர்ச்சியாக விளையாட அவர் மறுத்துள்ளது என்ன காரணமாக? இருக்கும் என்கிற கேள்வியையும் எழுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. அவர் கொல்கத்தா அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் எந்த அணி அவரை ஏலத்தில் எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..