ஷாக்கிங் வீடியோ: மின்னல் தாக்கி கால்பந்து வீரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்.!
கால்பந்து போட்டியின் போது, மின்னல் தாக்கி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு : பெரு நாட்டில் Juventud Bellavista மற்றும் Familia Chocca ஆகிய இரண்டு கிளப்புகளுக்கு இடையில் Huancayoவில் இடம்பெற்ற போட்டியின் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் புயல் தீவிரமடைந்தபோது, போட்டி நிறுத்தப்பட்டதாகவும் நடுவர் ஆட்டத்தை நிறுத்திய பிறகு, வீரர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி வீரர்கள் சிலர் அப்படியே கீழே விழும் சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
அதில், 39 வயதான கால்பந்து வீரர் ஜோஸ் ஹூகோ டி லா குரூஸ் மெசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்பொழுது, சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவில், மழை பெய்ததால், நடுவர் வீரர்களை மைதானத்தை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்துகிறார்.
அதன்படி, வீரர்கள் மைதானத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் ஜோஸ் ஹூகோ டி லா குரூஸ் மேசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
In Peru, a soccer player died after being struck by lightning during a match
The tragedy occurred on November 3 during a match between clubs Juventud Bellavista and Familia Chocca, held in the Peruvian city of Huancayo.
During the game, a heavy downpour began and the referee… pic.twitter.com/yOqMUmkxaJ
— NEXTA (@nexta_tv) November 4, 2024
மேலும் சில வீரர்கள் சில தீக்காயங்களுக்கு ஆளானதால் அவர்கள் பெரும் காயம் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், கோல்கீப்பர் ஜுவான் சோக்கா லாக்டா ஆபத்தான நிலையில் இருக்கிறார்