கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் , பார்படோஸ் அணியும் மோதினர்.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 219 ரன்கள் இலக்குடன் இறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தனர். இதனால் வாரியர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சோயிப் மாலிக் 32 ரன்கள் எடுத்தன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சர்வேதேச டி20 மட்டுமல்லாமல் அனைத்து வகையான டி20 போட்டிகளில் கலந்துகொண்டு 9,000 ரன்களை கடந்துள்ளார்.
இவர் 335 டி20 போட்டிகளில் விளையாடி 9014 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.
டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 386 போட்டிகளில் 13,051 ரன்களை குவித்து கெய்ல் முதலிடத்திலும் , 9922 ரன்களுடன் மெக்கல்லம் இரண்டாம் இடத்திலும் 9757 ரன்களுடன் பொல்லார்டு மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சோயிப் மாலிக் உள்ளார்.
ஆனால் இந்திய வீரர்கள் ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…