டி20 போட்டியில் 9000 ரன்கள் கடந்து சோயிப் மாலிக் சாதனை…!

Default Image

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் , பார்படோஸ் அணியும் மோதினர்.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 219 ரன்கள் இலக்குடன் இறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தனர். இதனால் வாரியர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சோயிப் மாலிக் 32 ரன்கள் எடுத்தன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சர்வேதேச டி20 மட்டுமல்லாமல் அனைத்து வகையான டி20 போட்டிகளில் கலந்துகொண்டு 9,000 ரன்களை கடந்துள்ளார்.
இவர் 335 டி20 போட்டிகளில் விளையாடி 9014  ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளார்.
டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 386 போட்டிகளில் 13,051 ரன்களை குவித்து கெய்ல் முதலிடத்திலும் , 9922 ரன்களுடன் மெக்கல்லம் இரண்டாம் இடத்திலும்  9757 ரன்களுடன் பொல்லார்டு மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில் சோயிப் மாலிக் உள்ளார்.
ஆனால் இந்திய வீரர்கள் ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்