தோனி கிட்ட இருந்து அதை கத்துக்கிட்டேன்! ஷிவம் துபே ஓபன் டாக்!
நேற்று (ஜனவரி 11) மொஹாலியில் ஆப்கானிஸ்தானு எதிராக நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே 40 பந்துகளில் 60* ரன்கள் எடுத்ததற்காக ஆட்ட நாயகன் ஆனார்.
இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று 17.3 ஓவர்களில் சிவம் துபே இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு பேசிய ஷிவம் துபே ” ஒரு பினிஷராக எப்படி விளையாடவேண்டும் என்பதை தோனியை பார்த்து கற்றுக்கொண்டேன் என ஷிவம் துபே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்த மாதிரி ஒரு முக்கியமான போட்டியில் இப்படி விளையாட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கான வாய்ப்பு வரும் போது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். நான் பேட்டிங் செய்ய வந்தபோது, போட்டியை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று விரும்பினேன்.
சாதாரணமான விஷயம் தான்! ரன் அவுட் குறித்து பேசிய ரோஹித் சர்மா!
எப்படி முடிக்கவேண்டும் என்பதனை ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய போது எம் .எஸ்.தோனியிடம் இதனை கற்றுக்கொண்டேன். ஐபிஎல் போட்டிகளில் நான் சென்னை அணியில் விளையாடும் போது தோனியிடம் எதாவது பேசிக்கொண்டே இருப்பேன்.அவ்வளவு பெரிய ஜாம்பவான் அவர். அவருடன் நாம் விளையாடும்போது பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். என்னுடைய ஆட்டத்தை பார்த்து அவர் சில நேரங்களில் பாராட்டி இருக்கிறார். அதையெல்லாம் மறக்கவே முடியாது.
அவர் பல சமயங்களில் என்னை தொடர்ச்சியாக பாராட்டியதன் காரணமாக தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதற்கான ஊக்கத்தை எனக்கு அளிக்கிறது, இதன் காரணமாக எனது நம்பிக்கை மிகவும் அதிகமாக உள்ளது” எனவும் ஷிவம் துபே தோனியை பற்றி பேசியுள்ளார்.