நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 14 லீக் ஆட்டங்களில் 7 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்திருந்தது. இன்னும் ஒரு போட்டியில் நன்றாக விளையாடி நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், வாய்ப்பை தவற விட்டு சோகத்துடன் வெளியேறியது.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற, ஷிகர் தவான் “நாக் அவுட்களுக்கு தகுதி பெறாததற்காக என் அப்பாவால் நாக் அவுட்” என்று தலைப்பு வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில், ஷிகர் தவானின் தந்தை அவரை கீழே தள்ளி எட்டி உதைக்கிறார். தவானும் அந்த அடி வாங்கிக் கொண்டு கீழே படுத்து இருக்கிறார். ஐபி எல்லில் ஒழுங்காக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் தோல்வி அடைந்துவிட்டு வீட்டுக்கு தவான் திரும்பிவிட்டதால் அவரது தந்தை விளையாட்டாக அடித்துள்ளார்.
சினிமா வில்லன்போல் தன் மகனை அடிக்கும் தமாஷுக்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மேலும், ஷிகர் தவான் நடைபெற்ற ஐபிஎல் 14 லீக் ஆட்டங்களிலும் விளையாடிய அவர் 453 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு அரை சதங்கள் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…