பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற ஷாகிப் அல் ஹசன்..!
நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமராகிறார். இதற்கிடையில், பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் வங்காளதேச கிரிக்கெட் வீரரும் கேப்டனுமான ஷாகிப் அல் ஹசன் வெற்றி பெற்றார்.
வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டார். ஷகிப் அல் ஹசன் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் மேற்கு நகரமான மகுரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
வங்கதேசத்தில் 5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா..!
இந்நிலையில், மகுரா நாடாளுமன்ற தொகுதியில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஷகிப் அல் ஹசன் வெற்றி பெற்றார். ஷகிப் அல் ஹசன் மகுரா நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 185,388 வாக்குகள் பெற்றதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 45,993 வாக்குகள் மட்டுமே பெற்றார். அரசியலுக்கு வந்தாலும், ஷாகிப் அல் ஹசன் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவார். இரண்டு பொறுப்புகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.